பேக்கல் கோட்டை, பேக்கல்

பேக்கல் கோட்டை பனை மரங்களால் சூழப்பட்ட, ஓய்வின்றி அலைகள் வந்து மோதிக்கொண்டே இருக்கும்  இரண்டு கடற்கரைகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோட்டை சிரக்கல் மகாராஜாக்களின் காலத்தில் எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் பொருட்டு கட்டப்பட்டது. இதன் வளைந்து வளைந்து செல்லும் நுழைவாயிலும், நீண்ட அகழியும் இதற்கு சான்றுகளாக விளங்கி வருகின்றன.

பேக்கல் கோட்டையின் வெளிப்புறங்கள் பாதிக்கு மேலாக கடல் நீரில் மூழ்கிவிட்டன. எனவே கடல் அலைகள் எப்போதும் கோட்டையை வந்து முத்தமிட்ட வண்ணமே இருக்கும். இந்த கோட்டை 40 ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதோடு, கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாகவும் இதுவே கருதப்படுகிறது.

பேக்கல் கோட்டையின் தென் பகுதியில் அமைந்திருக்கும் சுரங்கத்திற்கு செல்லும் பாதையும், அகழிக்கு செல்லும் படிகளும், படைக்கலக் கொட்டிலும், கண்காணிப்பு கோபுரத்தை நோக்கி செல்லும் படிக்கட்டுகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள்.

Please Wait while comments are loading...