மாலிக் தீனர் மசூதி, பேக்கல்

மாலிக் தீனர் கிராண்ட் ஜூம்மா மஸ்ஜித் என்று முன்னர் பிரபலமாக அறியப்பட்ட மாலிக் தீனர் மசூதி தலங்கரா பகுதியில் மாலிக் இப்னே தீனர் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மசூதி கி.பி 642-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும், மீண்டும் 1809-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்தியாவில் தொன்மையான மசூதிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்த மசூதியில் உள்ள மாலிக் இப்னே முஹம்மது என்பவருடைய சமாதி, அவருடைய சந்ததியை சேர்ந்த மாலிக் இப்னே தீனரால் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதி முழுக்க முழுக்க மலபார் கட்டிடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மசூதியை கட்டிய மாலிக் தீனர் கேரளாவுக்கு இஸ்லாமிய மதத்தை பரப்புவதற்காக வந்ததாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மாலிக் தீனர் காசர்கோட் பகுதிக்கு வந்தபோது அப்போதைய காசர்கோட் ஆட்சியாளர் சேரமான் பெருமாள் இஸ்லாமிய மதத்தின் மீது ஈர்க்கப்பட்டு பின்னர் அந்த மதத்துக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படும் உரூஸ் திருவிழாவின் போது இந்த மசூதிக்கு ஏராளமான பக்தர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர்.

Please Wait while comments are loading...