ஹவுஸ்போட் குரூஸ், பேக்கல்

பேக்கல் நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் ஹவுஸ்போட் குரூஸ் எனப்படும்  படகு இல்லத்தில் பனைமரங்கள் சூழ அமைந்திருக்கும் காயல் நீரில் உல்லாசமாக பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்தை தவற விட்டுவிடாதீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லமே உங்களுக்கு சொர்கத்தில் வசிப்பது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

இதன் காரணமாகவே சலிப்பும், அலுப்பும் மிகுந்த தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு சிறந்த நிவாரணமாக திகழும் இந்த படகு இல்லங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தேன் நிலவை கொண்டாடுவதற்காக இந்த படகு இல்லங்களை தேடி வரும் புது மனத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் இந்த படகு இல்லங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

Please Wait while comments are loading...