தர்ப்பண சுந்தரி அல்லது ‘கண்ணாடி மங்கை’என்றழைக்கப்படும் இந்த அற்புதச்சிற்பம் பேலூர் சென்னக்கேசவா கோயிலில் உள்ளது. சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள இந்த கலையம்சம் மிளிரும் சிற்பத்தைச் சுற்றி அலங்கார வடிவமைப்பு மற்றும் நடன மங்கையரின் நுட்பமான சிறு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இந்த கலாரூப சிற்பம் அப்போதைய ராணி ஷாந்தலா தேவியின் அழகை பின்பற்றி வடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த ஷாந்தலா தேவி விஷ்ணுவர்த்தன மன்னரின் மனைவி ஆவார்.



Click it and Unblock the Notifications