பரத்பூரில் உள்ள லோஹாகர் கோட்டையின் உள்ளே இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டுவருகிறது. இங்கு பரத்பூரின் வரலாற்றுச் செல்வங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
பரத்பூர் ஆட்சியாளர்களின் காலத்தில் கச்சஹ்ரி கலன் என்ற பெயரில் நிர்வாக அலுவலமாக பயன்பட்டு வந்த இந்த பகுதி 1944-ஆண்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு முதல் தளத்தில் உள்ள கம்ரா காஸ் பகுதியும் இந்த அருங்காட்சியகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. மேலும் இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் பால்வாந்த் மகாராஜாவால் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும்.
இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்கள், கல்வெட்டு குறிப்புகள், வகைமாதிரிகள், அலங்கரிக்கப்பட்ட கலைப்பொருட்கள், ஜட் மாவீரர்கள் பயன்படுத்திய போராயுதங்கள் போன்ற அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
அதோடு இங்குள்ள கலைக்கூடத்தில் மைக்கா மற்றும் அரச இலைகளில் வரையப்பட்ட மினியேச்சர் ஓவியங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். மேலும் பரத்பூர் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதால் அருங்காட்சியகத்தை சுலபமாக அடைந்து விடலாம்.



Click it and Unblock the Notifications