பரத்பூரில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றான லக்ஷ்மன் கோயில் கட்டப்பட்டு 400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ராஜஸ்தானிய கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
இந்த கோயிலின் மேற்கூரைகள், சுவர்கள், தூண்கள், நுழைவாயில்கள் என்று அனைத்துமே அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் ராமபிரானின் தம்பி லக்ஷ்மணனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை நாக பாபா என்ற முனிவர் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலுக்கு அருகில் லக்ஷ்மணனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயிலும் இருக்கிறது. இது பால்தேவ் சிங் மகாராஜாவின் ஆட்சி காலத்தில் 1870-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
அதோடு இந்த கோயில் மணற்பாறைகளையும், வெள்ளை சலவைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்டிருக்கும் பேரழகை நாள் பூராவும் ஈசித்துக் கொண்டிருக்கலாம். மேலும் இங்குள்ள அஷ்டதாத்து சிலைகளான ராமர் சிலை, லக்ஷ்மன், ஊர்மிளா, பரதர், சத்ருக்கணன், ஹனுமார் ஆகியவை பயணிகளிடையே மிகவும் பிரபலம்.



Click it and Unblock the Notifications