குஜராத் மாநிலத்தில், பாவ்நகர் மாவட்டத்திலுள்ள சிஹோர் நகரில் அமைந்திருக்கிறது பிரம்ம குண்டம். இது படிகட்டுக்களை கொண்ட ஒரு பெரிய நீர்த் தொட்டி. இந்த பிரம்ம குண்டத்தில் பல இந்து கடவுள்களின் சிற்பங்கள் உள்ளன. பிரம்ம குண்டத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.
ராணக் தேவியினால் சபிக்கப்பட்ட சித்தராஜ மகராஜர், தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு பிரம்ம குண்டம் வந்து நீராடியப் பிறகு நோய் குணமானதாக வரலாற்று நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
படிகள், சிறிய கோவில்கள், சிற்பங்கள் மற்றும் தெய்வச் சிலைகளை உள்ளடக்கி, மத்திய கால கட்டிடக்கலையின் வடிவமைப்பில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications