Search
  • Follow NativePlanet
Share

பிலாய் – இந்தியாவின் இரும்பு நகரம்!

7

சத்திஸ்ஹர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் இந்த பிரசித்தமான ‘பிலாய்’ நகரம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து  25 கி.மீ தூரத்தில், NH6 தேசிய நெடுஞ்சாலையில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி ஆலையான ‘பிலாய் இரும்பு ஆலை’ இங்குதான் இயங்குகிறது. இந்தியாவிலேயே ரயில் தண்டவாளங்கள் தயாரிக்கப்படும் ஒரே இடம் எனும் பெருமையையும் இந்நகரம் பெற்றிருக்கிறது.

கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்!

தீபாவளி, ஹோலி, துர்க்கா பூஜா, ஈத் போன்ற எல்லா திருவிழாக்களும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இங்கு சீக்கிய மக்கள் அதிகம் வசிப்பதால் பைசாகி, குருபிரபா (குரு கோபிந்த்சிங் பிறந்தநாள்) போன்ற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து மாநில, அனைத்து மதப்பிரிவு மக்களும் இங்கு வசிப்பதால் இதற்கு ‘மினி இந்தியா’ என்ற பெயரும் உண்டு.

பிலாய் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

பிலாய் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாக மைத்ரி பாக், சிவிக் சென்டர், காளிபாரி போன்றவை அமைந்திருக்கின்றன. இவற்றில் மைத்ரி பாக் என்பது ஒரு விலங்குக்காட்சி சாலையாகும்.

பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு விஜயம் செய்கின்றனர். பல்வேறு சிறிய கோயில் வளாகங்களும் இந்நகரத்தில் காணப்படுகின்றன.

பிலாய் பருவநிலை

பிலாய் நகரம் கோடைக்காலத்தில் கடும் வெப்பத்துடனும் குளிர்காலத்தில் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது.

எப்படி செல்லலாம்?

பிலாய் நகரம் சாலைப்போக்குவரத்து வசதி மற்றும் ரயில், விமான சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

பிலாய் சிறப்பு

பிலாய் வானிலை

சிறந்த காலநிலை பிலாய்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பிலாய்

  • சாலை வழியாக
    ராய்பூர் நகரம் மற்றும் இதர சட்டிஸ்கர் நகரங்களிலிருந்து பிலாய் நகரத்துக்கு பேருந்து போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ராய்பூர் ரயில் நிலையம் பிலாய் நகரத்துக்கு அருகில் உள்ளது.இது மும்பை-ஹௌரா பிரதான ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராய்பூர் விமான நிலையம் பிலாய் நகரத்துக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஞ்சி, வைசாக் மற்றும் சென்னைக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue