அப்பர் லேக் ஏரியின் கரையில் உள்ள கோஹர் மஹால் போபால் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அரண்மனைகளில் ஒன்றாகும். போபால் நகரத்தின் முதல் பெண் அரசியான கோஹர் பேகம் என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது.
1820-ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த அரண்மனை கட்டப்பட்டதிலிருந்தே இந்த மாளிகை கட்டிடக்கலை அற்புதமாக விளங்கி வருகிறது. இந்து மற்றும் முகலாய கட்டிடக்கலையின் மிகச்சரியான இணைவாகவே இந்த மாளிகை உள்ளது.
அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த எதிர்பார்ப்பிற்கேற்ப இந்த மாளிகை பராமரிக்கப்படாமல் பரிதாபமான நிலையில் இருந்தாலும், அது தனது முந்நாளைய பிரம்மாண்டத்தையும் மற்றும் வளமையையும் இன்னும் இழக்கவில்லை.
இன்றைய நாட்களில் போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு பெற்ற கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் கோஹர் மஹாலை, அதன் பழைய அழகையும் மற்றும் பிரமிப்பையும் உருவாக்கும் பொருட்டாக மத்தியப் பிரதேச மாநில அரசு சீரமைப்பு செய்து வருகிறது.



Click it and Unblock the Notifications