போபால் நகரத்தின் ஷாம்லா மலைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா, அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காண ஏற்ற இடமாகும்.
இந்த 1977-ம் ஆண்டு மனித குல வராலாற்றை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சங்கராலயாவில் மிகப்பெரிய திறந்தவெளி மானிடவியல் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காகவே, எண்ணற்ற திறந்த வெளி கண்காட்சிகள் மற்றும் உள்ளரங்கு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் ஆழமான பார்வையையும், பழமையான இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய பல்வேறு விஷயங்களும் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களையும் மற்றும் அவற்றைப் பற்றிய நீண்ட குறிப்புகளையும் கொண்டுள்ள இந்த வகை அருங்காட்சியகத்தை இந்தியாவிலேயே இந்த ஒரு இடத்தில் மட்டுமே காண முடியும்.
இங்கிருக்கும் வீதி சங்குல் என்ற உள்ளரங்கு அருங்காட்சியகத்தில், உயிரியல் மற்றும் கலாச்சார பரிணாம வளர்ச்சியைப் பற்றி 13 வகையான ஓவிய காட்சிகள் பல்வேறு தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான சுற்றுலா பார்வையிடமாகவே இந்த ஓவிய காட்சி சலை உள்ளது.



Click it and Unblock the Notifications