பிந்து சாகர் ஏரி லிங்கராஜ் கோயிலுக்கு வடக்கே அமைந்திருக்கிறது. புபனேஷ்வர் நகரத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.
அமைதியான சூழல் மற்றும் இயற்கை அழகு நிறைந்திருப்பதால் இது ஒரு பிக்னிக் ஸ்தலமாகவும் விளங்குகிறது. பிரம்மாண்டமான இந்த ஏரி 1300 அடி நீளமும் 700 அடி அகலமும் உடையதாக காணப்படுகிறது.
ஹிந்து ஆன்மிக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த பிந்து சாகர் ஏரி ஒரு முக்கியமான தீர்த்தமாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லிங்கராஜ் கோயிலில் உள்ள தெய்வச்சிலை இந்த ஏரியில் நீராட்டப்பட்டு பூஜைச்சடங்குகள் செய்விக்கப்படுகின்றன.
புனிதமான இந்த தீர்த்தத்தில் நீராடும் பக்தர்களின் பிணிகள் மற்றும் பாவங்கள் யாவும் குணமாகி கரைந்து போகும் என்ற நம்பிக்கையும் நிலவிவருகிறது. எனவே பக்தர்கள் மற்றும் யாத்ரிகர்கள் மத்தியில் இந்த பிந்து சாகர் ஏரி பிரசித்தமாக அறியப்படுவதில் வியப்பொன்றுமில்லை.



Click it and Unblock the Notifications