புபனேஷ்வர் நகரத்தின் மையப்பகுதியில் இந்த இஸ்க்கான் கோயில் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இஸ்க்கான் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலில் கிருஷ்ணர், பலராமர், ஜகந்நாதர், கௌரா நிதய் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
புபனேஷ்வர் நகரத்தில் இஸ்க்கான் (ISKCON)) அமைப்பின் ஆன்மீக செயல்பாடுகள் வெகு தீவிரமாக இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இரண்டு இஸ்க்கான் மையங்களில் ஒன்று ஸ்வர்க் துவாரா பகுதியிலும் மற்றொன்று புறநகர்ப்பகுதியிலும் அமைந்துள்ளன.
ஏராளமான கிருஷ்ண பக்தர்கள் இந்த இஸ்க்கான் கோயிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணர் மற்றும் ஜகந்நாஹர் தொடர்பான திருவிழா நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
புவனேஷ்வர் நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருமே இந்த இஸ்க்கான் கோயிலுக்கு விஜயம் செய்ய தவறுவதில்லை.
எல்லா இஸ்க்கான் கோயில்களை போன்றே இங்கும் பூஜைகள் மற்றும் பஜனைகள் தினசரி குறித்த நேரத்துக்கு நடத்தப்படுகின்றன. ஒரு அலுவலகத்தை போன்று நேர்த்தியாக இந்த கோயிலின் பராமரிப்பு மற்றும் நிர்வாக நடைபெறுவது பார்வையாளர்களை கவரக்கூடிய அம்சமாகும்.



Click it and Unblock the Notifications