ஒடிஷா மாநிலத்தலைநகரான புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த முக்தேஷ்வர் கோயில் 10 நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும். நகரத்தின் மற்றொரு முக்கியமான அடையாளமாக இக்கோயில் வீற்றிருக்கிறது. இந்த கோயிலை சுற்றிலும் காணப்படும் அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுக்காக இது புகழ் பெற்றுள்ளது.
சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் முக்தேஸ்வரர் எனும் ரூபத்தில் சிவபெருமான் வீற்றுள்ளார். முக்திக்கான கடவுள் என்பது இந்த பெயரின் பொருளாகும்.
இக்கோயில் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நடனத்திருவிழா ஒன்று பிரசித்தமாக மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இந்த நடனத்திருவிழா ஒடிஷா அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஒடிஷா மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமான ஒடிசி நடனத்திற்கு இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த முக்தேஷ்வர் கோயில் வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications