நந்தன்கானன் ஜூ எனப்படும் இந்த விலங்குக்காட்சி சாலை ஒரு தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியதாக 400 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1979ம் ஆண்டு இது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.
தற்போது புபனேஷ்வர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த நந்தன்கானன் விலங்குக்காட்சி சாலை பிரசித்தமாக அறியப்படுகிறது.
குழந்தைகளுடன் புபனேஷ்வர் நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் அவசியம் இந்த பூங்காவுக்கு வரலாம். பசுமையான சந்தகா-தம்பரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கஞ்சிதா ஏரிக்கு நடுவே இந்த நந்தன்கானன் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அமைந்திருக்கிறது.
தனது பெயருக்கேற்றபடி இந்த அற்புத தோட்டப்பூங்காவாக இந்த நந்தன்கானன் காட்சியளிக்கிறது. இங்குள்ள விலங்குகாட்சி சாலையில் பல்வேறு காட்டு விலங்குகள் மட்டுமல்லாது அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
126 வகையான விலங்குகள் இங்கு வசிக்கின்றன. நல்ல முறையில் இவை பாதுகாக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் அதிக எண்ணிக்கையில் இங்கு பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் இன்னும் அதிகமான மக்கள் திரளாக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications