எஸ்.பி.முகர்ஜி பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரின் அழகிய பூங்காக்களில் ஒன்றாகும். மக்கள் ரம்மியமான இயற்கைச்சூழலில் பொழுதுபோக்கும் வகையில் ரசனையுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.
நடைபாதைகள், பெரிய இருக்கைகள் மற்றும் ஓட்டப்பாதைகள் போன்றவை இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பூங்காவின் பசுமையான சூழல் பார்வையாளர்களை கவரும் வகையில் காட்சியளிக்கிறது.
பலவிதமான மலர்ச்செடிகள், நீர்த்தடாகங்கள், புல்தரைகள் போன்றவை இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் இந்த எஸ்.பி.முகர்ஜி பார்க் திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications