Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீஜாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » கொத்தளம்

கொத்தளம், பீஜாப்பூர்

40

பீஜாப்பூரில் உள்ள இந்த கொத்தளம் (பாதுகாப்புக்கோட்டை) எனும்  வரலாற்றுச்சின்னமும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கட்டிடக்கலை அம்சமாகும். அர்க்கில்லா என்று அறியப்படும் இந்தக் கொத்தளம் யூஸப் அடில் ஷா மன்னரால் 1566ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

இந்த கோத்தளத்தை சுற்றி 100 கஜ அகலமுள்ள கால்வாய் ஓன்றும் காணப்படுகிறது. இது அக்காலத்தில் ஒரு நீராதாரமாகவும் விளங்கியிருக்கிறது. இந்த கொத்தளத்தின் உட்பகுதியில் பல ஹிந்துக்கோயில்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன.

இவை இஸ்லாமிய காலத்துக்கு முந்தைய பீஜாப்பூர் நகரத்தின் வரலாற்று ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்தக் கொத்தளத்தின் சுற்றுச்சுவர்கள் 30 – 50 அடி உயரத்துடன் காட்சியளிக்கின்றன.

பலவிதமான கலையம்சம் கொண்ட கட்டிடக்கலை வடிவமைப்புகளுடன் கூடிய  96 பிரமாண்ட காவல் அரண்கள் இந்த கோட்டைச்சுவரில் அமைந்துள்ளன.இந்தக் கொத்தளம் 25அடி அகலம் கொண்ட 10 நுழைவாயில்களை கொண்டுள்ளது. எதிரிகளின் ஊடுறுவலைத் தடுப்பதற்காக இந்த கொத்தளம் பீஜாப்பூர் அரசர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொத்தளத்தில் காணப்படும் இடிபாடுகளும் சின்னங்களும் அக்கால நாகரிக மேன்மையையும் அரசாட்சி முறையையும் பிரதிவலிக்கும் வகையில் உள்ளன. இது கர்நாடக மாநிலத்தில் ஒரு முக்கியமான வரலாற்று சின்னமாகவும் சுற்றுலாஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதன் வரலாற்று சிறப்பு காரணமாக பயணிகள் இதைக்காண அதிக அளவில் வருகை தருகின்றனர். ககன் மஹால் அரண்மனை, சத் மன்ஸில், பரா கமன் மற்றும் ஜல மன்ஸில் போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இந்த கொத்தளத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue