பராபர் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாறைக்குடைவறைகளில் நான்கு முக்கியமான அமைப்புகள் பிரசித்தமாக அறியப்படுகின்றன. லோமாஸ் ரிஷி எனும் குடைவறைக்குகையின் வாசல்பகுதி ஒரு அலங்காரமான விதான வளைவு வாயிலை கொண்டிருக்கிறது.
யானைகள் வரிசையாக ஸ்தூப சின்னங்களை நோக்கி நகர்வது போன்று குகையின் சுவர்ப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர சுதாமா என்றழைக்கப்படும் குடைவறையானது கி.மு 261 ம் வருடத்தில் ஆட்சி செய்த அசோகர் சக்ரவர்த்திக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதன் நுழைவாயில் பகுதி ஒரு வில் போன்ற அமைப்பையும், செவ்வக வடிவிலான உட்கூடப்பகுதி குமிழ் மாடக்கூரையையும் கொண்டுள்ளது.
கர்ணா சௌபர் எனப்படும் மற்றொரு குடைவறை அமைப்பானது வழவழப்பான உட்புறத்தைக்கொண்ட ஒற்றை அறை அமைப்பாக காட்சியளிக்கிறது. நான்காவதாக, விஸ்வ ஜோப்ரி எனப்படும் குடைவறை இரண்டு செவ்வக வடிவிலான அறைகளை கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications