தூத் பாதர் அடர்ந்த காடுகள், மலைகள், மற்றும் ஒரு நீரோடை இடையே அமைந்துள்ள ஒரு அழகான இடமாகும். உள்ளூர்வாசிகள் நுந்த் ரிஷி என்ற காஷ்மீரி முனிவர் தண்ணீர் தேடி இந்த இடத்திற்கு வந்தார் என்று நம்புகின்றனர்.
புராண கதைகளின் படி இம்முனிவர் தண்ணீர் தேடி தரையில் தோண்டிய போது பூமியில் இருந்து பால் வெளிவரத்தொடங்கியது. இச்சம்பவத்திற்கு பிறகு இந்த இடமானது தூத்பாதர் என்று அழைக்கப்பட்டது.
இரண்டு ஹிந்தி வார்த்தைகள் சேர்ந்து “தூத்” என்றால் ‘பால்’ என்றும், “பாதர்” என்றால் ‘மலை’ என்றும் பொருள் படும் இந்த பெயர் வந்தது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள மற்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சோகில் பாதர், முஜ்பாதர், தோப்கல் ,பால்மெய்டன், பரிகாஸ் மற்றும் தங்நார் முதலியன.



Click it and Unblock the Notifications