நில்நாக், யஸ்மார்கில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாகும். யஸ்மார்கில் இருந்து செல்லும் பாதை சற்று கடினமாகவும் அடர்ந்த காடுகள் வழியாகவும் செல்கிறது.
தெளிவான நீல வண்ண நீரை இந்த ஏரி கொண்டுள்ளதால் அதற்கு இப்பெயர் வந்தது. அதாவது “நில்” என்பது நீல வண்ணத்தையும், “நாக்” என்பது ஏரியையும் குறிக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலாதலமாகும். இந்த ஏரியில் இருந்து 13 கி.மீ மலையேற்றம் செய்தால் பல்வேறு இடங்களுக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications