சுக் நாக் அல்லது ஆறுதல் நீருற்று ஆரம்பத்தில் சுகா நாக் என்று அறியப்பட்டிருந்தது. இந்த அழகான நீருற்று புத்காம் மாவட்டம் டோஸாமெய்டனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது.
சிறிய நீர் நிலைகளோடு சேருவதற்கு முன்பதாக இந்த நீருற்று கஞ்ச் ஜூப்ஜி என்ற இடத்தில் சுமார் 20 அடி உயர நீர் வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இந்த சுக் நாக் நீருற்றின் முக்கிய நீர் ஆதாரம் பெரிய கற்பாறைகள் இடையே பாயும் அகிஜ் நீரோடையாகும்.
இந்த நீருற்றானது மேலும் சோனா மேன் கோல் மற்றும் மாலா கோல் என்ற நீருற்றுகளாக பிரிக்க்கப்படுகிறது. இதன் நீர் பீர்வா தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் நீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications