பாபா லத்தீஃப்-உத் தின் கல்லறை புத்காம் மாவட்டம் போஷ்கர் கிராமத்தில் அமைந்துள்ளது. லூடோ ரெய்னா என முன்பு அழைக்கப்பட்ட, பாபா லத்தீஃப்-உத் தின், ஷேக் உல் ஆலமின் (ரலி) ஒரு விலைமதிப்பற்ற சீடர் ஆவார். அவர் கிராமத்தை விட்டு பாபா மார்க் என்ற ஒரு குகையில் பல ஆண்டுகள் தவம் செய்தார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, அவர் இங்கே தான் இறந்தார். பாபா உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியானது அதிசயமாக போஷ்கர் கிராமத்திற்கு பறந்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர் இங்கு புதைக்கப்பட்டார்.
இந்த கல்லறை உர்ஸ் சமயத்தில் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இது இந்துக்களின் பகுனா மாத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. பாபா விட்டு சென்ற பொருட்கள், ஒரு வாள் உட்பட இந்த நேரத்தில் பக்தர்களுக்கு காட்டப்படுகின்றன.



Click it and Unblock the Notifications