மஹாபாரத காவியத்தில் மிகப்பெரிய வீரனாக சித்தரிக்கப்பட்டுள்ள கர்ணனின் பெயரால் இந்த கர்ணவாஸ் நகரம் அமைந்துள்ளது. கொடைக்குணத்திற்காக புகழ் பெற்று விளங்கிய கர்ணன் அக்காலத்தில் தன்வீர்கர்ணா எனும் சிறப்பு பெயரால் அறியப்பட்டார்.
அவர் தனது ஆட்சியில் தினமும் 50 கிலோ தங்கத்தை தானமாக வழங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நகரத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கு வீற்றிருக்கும் கல்யாணி தெய்வத்தையும் தரிசிக்கின்றனர்.
இந்த கோயிலும் மஹாபாரத காலத்துக்குரியதாக சொல்லப்படுகிறது. புலந்த்ஷாஹர் நகரத்துக்கு மிக அருகிலேயே உள்ள இந்த கர்ணவாஸ் நகரத்திற்கு டாக்சிகள் அல்லது ஆட்டோ மூலமாக சென்றடையலாம்.