லோஹாகாட் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் சம்பவத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த இடம் லோஹாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதன் மதிமயக்கும் அழகை பார்த்து காஷ்மீருக்கு அடுத்து இது தான் இரண்டாவது சொர்க்கம் என்று கூறியுள்ளார் P.பாரன் என்பவர்.
இது உத்தர்கந்த்திலுள்ள சம்பவத் மாநகராட்சியில் அமைந்துள்ள நகர பஞ்சாயத்தாகும். இங்குள்ள பழமையான கோவில்கள் பலவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுக்களிக்கலாம்.
இந்த கோவில்களில் பலதரப்பட்ட இந்துத் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இங்கு கொண்டாடப்படும் ஹோலி மற்றும் ஜன்மஷ்டாமி பல சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும்.
சுற்றுலா வந்தவர்கள் காதி பஜாரில் சென்று பொருட்கள் வாங்கலாம், மேலும் அருகில் இருக்கும் கல்சௌரா என்ற அழகிய இடத்தையும் கண்டுக்களிக்கலாம்.



Click it and Unblock the Notifications