சௌகோரி பகுதியில் பெரிநாக் எனும் இடத்திலுள்ள நாகமந்திர் கோயில் ஒரு முக்கியமான கோயிலாகும். பள்ளத்தாக்குகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த பாம்புக்கோயில் வீற்றுள்ளது.
14ம் நூற்றாண்டில் மஹாராஷ்டிராவைச்சேர்ந்த பந்த் இனத்தார் இப்பகுதியில் குடியேறியபோது பல வண்ணங்களில் பாம்புகளை அதிகம் இங்கு பார்த்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னரே இந்த பாம்புக்கோயில் கட்டப்பட்டதாக உள்ளூர்க்கதைகள் கூறுகின்றன. மற்றொரு ஐதீகக்கதையின்படி காளிந்தி எனும் பாம்பை வீழ்த்திய கிருஷ்ண பஹவான் அதனை யமுனை நதிக்கரையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதன்படியே காளிந்தி நாகமானது தனது சுற்றங்களுடன் இப்பகுதிக்கு வந்து குடியேறியதாகவும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications