புவனேஷ்வர் எனும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 1350 மீ உயரத்தில் உள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் எனும் குகைக்கோயில் அமைந்துள்ளது. இது சிவனுக்கான கோயில் என்ற போதிலும் இந்த பழமையான கோயிலில் 33 கோடி தெய்வங்கள் உறைவதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
குகைக்கோயிலுக்கு செல்லும் சுரங்கப்பாதையில் பல அற்புதமான கடவுள் சிற்பங்களையும், ஸ்டாலக்மைட் எனும் பாறைப்படிம அமைப்புகளையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
கங்கோலிகாட் எனும் இடத்திலிருந்து வடகிழக்கே 16 கி.மீ தூரத்திலுள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் கோயில் ஸ்தலத்திலிருந்து ராஜ்ரம்பா, பாஞ்சசுலி, நந்த தேவி மற்றும் நந்த காட் போன்ற சிகரங்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்த ஸ்தலத்தின் ஆன்மீக முக்கியத்துவமானது சார் தாம் ஸ்தலத்திற்கு ஈடானதாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications