சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த மெரினா பீச் எனும் பிரம்மாண்ட கடற்கரைப்பகுதி வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் இந்த மெரினா கடற்கரை தூய்மையாக இடமாக புகழ் பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த கடற்கரை நீரானது தூய்மை கெட்டும் கடற்கரை பகுதி மாசுபட்டும் காட்சியளிக்கிறது. இருப்பினும் இந்த நிலையை மாற்றுவதற்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மெரினா கடற்கரைப்பகுதியில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்களின் நினைவுத்தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டிய சாலையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளின் சிலைகளை வரிசையாக பார்க்கலாம். பாரம்பரியம் மிக்க சில கல்லூரிகளும் இந்த கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கின்றன. மேலும், பயணிகள் இங்கு அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications