Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சிக்பல்லாபூர்

சிக்பல்லாபூர் - ஸ்ரீ விஸ்வேஸ்வரைய்யா பிறந்த ஊர்

15

கர்நாடக மாநிலத்தில்  புதிய சிக்பல்லாபூர் மாவட்டத்தின் தலைநகராக இந்த சிக்பல்லாபூர் விளங்குகிறது. முன்பு கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த இந்த நகரத்தில் பல சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன.

பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள  சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது. மேலும் இந்த மாவட்டம் பிரசித்தி பெற்ற பொறியாளரும் ஆட்சியாளருமான ஷீ விஸ்வேஸ்ரய்யா அவர்கள் பிறந்த இடம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.

ஒரு கல்விக்கேந்திரமாக விளங்கும் இந்த நகரத்தில் பல முக்கியமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. விஸ்வேரய்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் ஷீ சத்ய சாய் பாபா யுனிவர்சிட்டி ஆகியவற்றுடன் முட்டனேஹள்ளியில் ஒரு ஐஐடி மையமும் திட்ட ஆலோசனையில் உள்ளது.

நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்கள்

சிக்பல்லாபூரில் பல இயற்கையான சுற்றுலா அம்சங்களும் மனித முயற்சியில் உருவான நினைவுச்சின்னங்களும் பயணிகள் கவரும் வகையில் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற நந்தி மலைகள் சிக்பல்லாபூரில் தாலுக்காவில் அமைந்துள்ளது.

இந்த மலையிலுள்ள நந்தீஸ்வரர் கோயில் மற்றும் மலையடிவார கிராமத்தில் அமைந்துள்ள போக நந்தீஸ்வரர் கோயில் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

சிக்பல்லாபூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா நீர்வீழ்ச்சி ஒரு இயற்கை எழில் வாய்ந்த ஸ்தலமாகும். மழைக்காலத்திற்கு பின் இங்கு விஜயம் செய்வது சிறந்தது. மற்றும் சிக்பல்லாபூருக்கு அருகிலுள்ள ரங்கஸ்தலாவில் விஜயநகர பாணியில் கட்டப்பட்ட ஒரு அழகிய விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது.

விஸ்வேரய்யா பிறந்த இடமான முத்தெனஹள்ளி  சிக்பல்லாபூருக்கு அருகில் உள்ளது. அவரது வீடு ஒரு மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் சித்ராவதியில் உள்ள சுப்ரமணியர் கோயில், எல்லோடு பகுதியில் உள்ள லக்‌ஷ்மி ஆதிநாராயண ஸ்வாமி கோயில் மற்றும் கந்தர்வா ஏரி போன்றவையும் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

இங்குள்ள மலைகளில் பாறை ஏற்றம் மற்றும் மலை ஏற்றம் போன்ற சாகச பொழுது போக்குகளுக்கு ஏற்ற இடங்கள் ஏராளம் உள்ளன. பெருநகரமான பெங்களூருக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் சிக்பல்லாபூருக்கு விஜயம் செய்வது பயணிகளுக்கு மிக எளிமையானதாகவும் உள்ளது. ரயில் அல்லது சாலை மார்க்கமாக சிக்பல்லாபூருக்கு சிரமமின்றி விஜயம் செய்யலாம்.

சிக்பல்லாபூர் சிறப்பு

சிக்பல்லாபூர் வானிலை

சிறந்த காலநிலை சிக்பல்லாபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிக்பல்லாபூர்

  • சாலை வழியாக
    பெங்களூரிலிருந்து சிக்பல்லாபூர் ஸ்தலத்துக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் சாதராணக் கட்டணத்தை கொண்டுள்ள KSRTC பேருந்துகள் அல்லது தனியார் சொகுசுப் பேருந்துகள் மூலம் பெங்களூரிலிருந்து இங்கு வரலாம். டாக்ஸிகள், ஆட்டோ மற்றும் வாடகை பைக்’குகளும் கூட பெங்களூரிலிருந்து சிக்பல்லாபூர் வருவதற்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிக்பல்லாபூரில் ரயில் நிலையம் உள்ளது. இது நகர மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது. இருப்பினும் அருகிலேயே உள்ள பெங்களூர் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக திகழ்கிறது. இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகள் வாடகை டாக்ஸி, வேன் மற்றும் பேருந்து மூலமாக சிக்பல்லாபூர் ஸ்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிக்பல்லாபூருக்கு அருகில் 48கி.மீ தூரத்தில் பெங்களூர் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. . இது முக்கிய இந்திய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்றவற்றுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது. மேலும் இங்கிருந்து அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed