இந்த பீம் குண்ட் – கீசக்தரா ஸ்தலம் சிக்கல்தரா சுற்றுலாப்பகுதியில் முக்கிய ஆன்மிக அம்சமாக புகழ்பெற்றுள்ளது. அல்லடோ கிராமத்திற்கு அருகிலுள்ள இந்த பீம் குண்ட் – கீசக்தரா 3500 அடி ஆழத்தை கொண்டுள்ளது.
பாண்டவ சகோதரர்களில் அசுர பலம் படைத்த பீமாவானவர் கீசகனை கொன்று இந்த ஆழமான பள்ளத்தாக்கில் வீசியதாக புராணக்கதைகள் சொல்லப்படுகின்றன. அதனாலயே இந்த சுற்றுலாத்தலத்துக்கு சிக்கல்தரா எனும் பெயர் வந்துள்ளது.
இந்த இடத்திலிருந்து சுற்றிலும் உள்ள அருவிகள் மற்றும் மலை சார்ந்த இயற்கை எழிலை – குறிப்பாக மழைக்காலத்தில் - நன்றாக பார்த்து ரசிக்க முடியும் என்பது கூடுதல் விசேஷமாகும்.



Click it and Unblock the Notifications