சிக்கல்தராவில் இரண்டு மியூசியங்கள் உள்ளன. இவை மஹாராஷ்டிர வனக்காவலர் கல்லூரியிலும், மெல்காட் புலிப்பாதுகாப்பு வளாகத்திலும் அமைந்துள்ளன.
மஹாராஷ்டிர வனக்காவலர் கல்லூரி பலவிதமான பதப்படுத்தப்பட்ட வனவிலங்குகளின் உருவங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளது. வெளிப் பார்வையாளர்களும் இவற்றை காண்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு அரிய தொல்லுயிர் படிமமும்(fossil) இங்கு வைக்கப்பட்டுள்ளது.
மெல்காட் புலிப்பாதுகாப்பு வளாகத்திலும் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அருகி வரும் புலிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொன்டு துவங்கப்பட்டிருக்கும் திட்ட வளாகத்தில் இந்த மியூசியம் உள்ளது.
குகமால் வனவிலங்கு பூங்காவின் ஒரு அங்கமாக அமைந்துள்ள இந்த மியூசியம் யோகா பயிற்சி மையத்தின் அருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications