பாஞ்ச்போல் பாயிண்ட் எனும் எழில் மிகுந்த இந்த மலைக்காட்சிதளம் சிக்கல்தரா பகுதியில் பீர் ஏரியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்கலாம்.
இதன் ஒரு புறம் காப்பி தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மறுபுறத்தில் சுற்றிலும் ஐந்து மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் உருவாகியுள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது. இந்த அற்புத இயற்கை அமைப்பு பிரமிப்புடன் பயணிகளால் ரசிக்கப்படுகிறது.
நாம் இந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தால் மலைப்பாறைகளில் பட்டு தெளிவாக ஐந்து முறை எதிரொலிக்கும் என்பதாக சொல்லப்படுகிறது. இதுவே இந்த மலைக்காட்சிதளத்திற்கு பாஞ்ச்போல் பாயிண்ட் எனும் பெயர் வருவதற்கு காரணம்.



Click it and Unblock the Notifications