Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோயம்புத்தூர் » ஈர்க்கும் இடங்கள் » காரமடை ரங்கநாத ஆலயம்

காரமடை ரங்கநாத ஆலயம், கோயம்புத்தூர்

31

காரமடை ரங்கநாத ஆலயம் கோயம்புத்தூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் எளிதில் அடையாளம் காணப்படும் வகையில் உள்ளது. 

இந்தக் கோயில் கண்ணைக் கவரும் சூழலில் கட்டப்பட்டுள்ளது. நீல நிற மலைகளைப் பின்னணியில் கொண்டு அமைந்துள்ள இந்தக் கோயில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.

அவர் இந்தக் கோயிலினுள் எண்ணற்ற தூண்களையும் மண்டபங்களையும் அமைத்துள்ளார். கரிகால சோழன் மற்றும் மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார்  ஆகியோர் இந்தக்கோயிலைப் புனரமைக்கவும் பராமரிக்கவும் உதவியதாக  நம்பப்படுகிறது.

இங்கு வழங்கப்படும் புராணக்கதைப்படி ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் இந்தக் கோயில் இருக்கும் இடம் வழியாக செல்லும்படி ரயில் பாதை ஒன்றை  அமைக்கத் தொடங்கினார்.

இது இங்குள்ள மக்கள் மற்றும் பக்தர்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வேண்டுதலால் உளம் குளிர்ந்த ரங்கநாதப் பெருமாள் அந்தப் பொறியாளரின் கனவில் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து காட்சியளித்துள்ளார்.

இதனால் அந்தப் பொறியாளர் கோயில் வழியாக பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டார். அந்த தெய்வத்தை சிறப்பிக்கும் வகையில்  மரத்தாலான வெள்ளைக் குதிரை ஒன்றை கோயிலுக்கு வெளியில் அவர் அமைத்தார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri