பானேஷ்வரா ஷிவா கோயில் என்றழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கூச் பிஹார் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கோயில் இரண்டு தனித்தன்மையான அம்சங்களுக்கு புகழ்பெற்றுள்ளது.
இங்கு தரைக்கு கீழே 10 அடி ஆழத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தை தரிசிக்க நாடெங்கிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இங்குள்ள தீர்த்தக்குளத்தில் ஆமைகள் அதிகமாக வசிக்கின்றன.
கோயிலின் பூஜைச்சடங்குகளில் இந்த ஆமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு தனித்தனி சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள தெய்வங்கள் வருடத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றி மாற்றி வைக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications