ராவி நதியின் மேல் கட்டப்பட்டுள்ள கமீரா அணைக்கட்டு ஹிமாச்சல் மாநிலத்தின் வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. டல்ஹெளசியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டு நீர்மின் சக்தி திட்டங்களை பராமரிக்க உதவுகிறது.
இங்கிருக்கும் ஏரியின் சிறப்பம்சம் அதன் மாறுபட்ட தட்பவெப்பநிலையே ஆகும். நீர்வாழ் உயிரினங்கள் இதில் வசிப்பதில்லையாதலால் இந்த ஏரியானது—நீர் விளையாட்டுக்களான ரோவிங் (Rowing), பெடல் போட்டிங் (Paddle boating), மோட்டார் போட்டிங் (Motor boating), துடுப்பு படகுகள் (Sailing), கேனோயிங் (Canoeing), ஆங்கிலிங் (Angling) மற்றும் கயக்கு (Kayaking) ஆகியவகைளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.



Click it and Unblock the Notifications