டல்ஹெளசியின் முதன்மையான வியாபாரத் தலங்களில் ஒன்றாக காந்தி சௌக் விளங்குகிறது. GPO என்றும் அறியப்படும் இந்த மிகப்பெரிய வியாபாரப் பகுதியில் நீங்கள் பல்வேறு கடைகள் மற்றும் ஹோட்டல்களை காண முடியும்.
இதற்கு அருகில் இருக்கும் திபெத்திய மார்க்கெட்டும் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. பயணிகள் இந்த மார்க்கெட்டுகளில் எலக்ட்ரானிக் சாதனங்கள் முதல் கைவினைப் பொருட்கள் வரை பல்வேறு விதமான பொருட்களை வாங்க முடியும்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 15 நிமிட பயணத்தொலைவில் இருக்கும் இந்த மார்க்கெட் பகுதியை பேருந்துகளின் மூலமாக அடைவது எளிது. பல்வேறு வகைகளிலான நகைகள், மேலாடைகள், கைவினைப் பொருட்கள், தரைவிரிப்புகள், கம்பளியில் நெய்யப்பட்ட சட்டைகள் மற்றும் கம்பளங்கள் இந்த மார்க்கெட்டில் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications