கடல் மட்டத்தில் இருந்து 2036மீ உயரத்தில் அமைந்திருக்கும் ஜாந்திரி குன்றுகள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த இடம் டல்ஹெளசியில் இருந்து 2 கிமீ தொலைவிலும் மற்றும் சுபாஷ் பாவ்லியில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடம் இங்குள்ள அரண்மனை தான். இந்த பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுவதற்கு முன்னர், இந்த அரண்மனையை மையமாக வைத்தே சம்பா பகுதியின் முன்னாள் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
இங்கு வருகை தரும் சுற்றுலாபயணிகள் இங்கே வைக்கப்பட்டுள்ள சில வெற்றிச் சின்னங்களை காணமுடியும். பைன் மரங்களால் மூடப்பட்டு பசுமையாக இருக்கும் இந்த பகுதியின் அழகு காண்போரை மனம் மயங்கச் செய்வதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications