10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த லட்சுமி நாராயண் கோவில் சம்பா பகுதியிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். கிபி.920 முதல் கிபி.940 வரை இந்த பகுதியை ஆண்டு வந்த சாஹில் வர்மன் என்ற அரசரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் அமைப்பு சிக்கார பணியிலான கட்டிடக்கலையை பின்பற்றியதாக இருப்பதால் காண்பவருக்கு வசீகரத்தை தருவதில் ஒரு குறையும் வைப்பதில்லை.
இந்த கோவிலில் ஆறு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இதில், இந்து மதத்தின் காக்கும் கடவுளான விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமான் ஆகியோரும் உண்டு.
இந்த கோவிலின் முதன்மையான கடவுளான விஷ்ணுவின் சிலையானது அரியவகை மார்பிள் கற்களால் செதுக்கப்பட்டுள்ளதால் அழகில் மின்னுகிறது. இந்த முதன்மையான கடவுள் மட்டுமல்லாமல், கௌரி சங்கர், ராதா மற்றும் கிருஷ்ணா ஆகிய தெய்வங்களும் இங்கே உள்ளன.



Click it and Unblock the Notifications