தாண்டி சடக் என்பது எண் 'எட்டின்' வடிவில் குறுக்காக செல்லும் சிலுவை வடிவ சாலையைக் குறிக்கிறது. ஹிந்தி மொழியில் 'தாண்டி' என்ற வார்த்தைக்கு குளிர் என்றும் மற்றும் 'சதக்' என்ற வார்த்தைக்கு சாலை என்றும் பொருளாகும்.
இந்த இடம் பைன், தியோதர் மற்றும் ஓக் மரங்களால் முழுவதும் மூடப்பட்ட சாலைகளைக் கொண்டிருப்பதால் சூரிய ஒளியின் கதிர்கள் மிகச்சிறிதளவே இங்கு நுழைய முடிகிறது. எனவே பிற இடங்களை விட இந்த இடம் மிகவும் குளிரானதாக இருக்கிறது.
ஓய்வெடுக்கும் வேளைகளில் நடந்து செல்வதற்கான அமைதியான இடமாக இருப்பதால டல்ஹெளசியில் இந்த இடம் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக இருக்கிறது. இந்த இடத்தின் அருகாமையில் உள்ள பாங்கி மலையின் அழகு சுற்றுலா பயணிகள் கண்டு பிரமிக்கும் வகையில் இருக்கும்.



Click it and Unblock the Notifications