கண்களுக்கு விருந்து தரும் கஜ்ஜார் கிராமத்திற்கு வருபவர்களுக்கு மலையேற்றம் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. கஜ்ஜார் கிராமத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் தரவல்ல அழகினை கொண்டுள்ளன. இந்த மலைப்பகுதியின் அழகை முழுமையாக அனுபவிக்க விரும்புபவர்கள் இந்த மலையின் உச்சிவரை மலையேற்றப் பயிற்சி மூலம் செல்ல வேண்டும்.
சம்பா மற்றும் காலாடாப் வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் கஜ்ஜார் ஒரு குறிப்பிடத்தக்க மலையேற்றப் பகுதியாக உள்ளது. இந்த மலையேற்றத்திற்கு முன் அனுபவம் தேவையில்லை என்பதும் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைவரும் இங்கு மலையேற முடியும் என்பதும் இங்கு சுற்றுலாப் பயணிகளை வரச் செய்யும் அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications