Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » ஈர்க்கும் இடங்கள் » சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ்

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ், தமன்

23

சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் கால்பந்து மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இது தமன் நகரத்தில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோட்டையாக கருதப்படுகிறது. போர்த்துகீசிய தளபதியான அல்ஃபான்ஸோ டி அல்புகெர்க் என்பவர் பீஜாப்பூர் சுல்தானை வென்றிட்ட 1510ம் ஆண்டை நோக்கி இதன் வரலாற்று பின்னணி நீள்கிறது.

லிஸ்பன் நகரத்தில் பிறந்து தமன் நகரத்தில் இறந்துபோன அகோஸ்டினோ சேவியர் டி சில்வா விடிகால் என்பவரது கல்லறையின் மீது 17 ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய கவர்னரால் இந்த சேப்பல் உருவாக்கப்பட்டிருக்கிறது.இதே இடத்தில்தான் முதல் உலகப்போரில் மரித்த வீரர்களும் புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல வண்ணங்களால் ஆன மலர் இதழ் அலங்கார அமைப்புகளை இந்த ஆலயம் கொண்டிருக்கிறது. மதகுருமார்களின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் இந்த ஆலயச்சுவர்களை அலங்கரிக்கின்றன. தங்க முலாம் பூசப்பட்ட பிரதான பீடத்தில் பல நுணுக்கமான அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தங்க முலாம் பூசப்பட்ட மர வேலைப்பாடுகள் மற்றும் அழகான ஏசு கிறிஸ்து ஓவியங்கள் போன்றவை அந்நாளைய போர்த்துகிசிய பாணி கலையம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue