Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » ஈர்க்கும் இடங்கள் » காளி ஆறு

காளி ஆறு, தண்டேலி

15

தண்டேலி சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காளிநதி என்றறியப்படும் காளி ஆற்றை பார்த்து ரசிப்பது அவசியம். இந்த ஆறு டிக்கி எனும் சிறு கிராமத்திலிருந்து உற்பத்தியாகி நான்கு லட்சம் மக்களுக்கான வாழ்வாதாரமாக திகழ்கிறது.

மின்சார உற்பத்திக்காக பல அணைகள் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. கணேஷ்குடி எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ளன் சுப்பா அணை அவற்றுள் முக்கியமான அணையாகும்.

மாட்டுத்தோல் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட கோப்பைகள் போன்று காட்சியளிக்கும் பரிசல் படகுகளில் பயணிகள் இந்த ஆற்றில் பயணம்  செய்து மகிழலாம். மேலும் ஆற்றுப்பகுதியில் பயணிகள் தூக்கணாங்குருவி, கொக்கு, மீன்கொத்தி போன்ற பறவைகளையும் பார்த்து மகிழலாம்.

184 கி.மீ நீளம் கொண்ட இந்த காளி ஆற்றைப் பார்க்க வருகை தரும் பயணிகள் இங்குள்ள பாலத்துக்கு அருகாமையிலுள்ள சதாஷிவகாட் கோட்டைக்கும் விஜயம் செய்யலாம். இந்த கோட்டையானது காளி ஆறு அரபிக்கடலுடன் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

கோவாவையும் கர்நாடக மாநிலத்தையும் இணைக்கும் NH-17 தேசிய நெடுஞ்சாலை இந்த ஆற்றுப்பாலத்தின் வழி செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆற்றுப்பகுதிக்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் அக்டோபரிலிருந்து மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் பயணிப்பது நல்லது. இக்காலத்தில் பயணிகள் ஆற்றுப்படகு சவாரி போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்வையாளராகவே கூட கண்டுகளிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat