Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » ஈர்க்கும் இடங்கள் » தண்டேலி காட்டுயிர் சரணாலயம்

தண்டேலி காட்டுயிர் சரணாலயம், தண்டேலி

15

தண்டேலிக்கு பயணம் செய்யும் பயணிகள் இந்த தண்டேலி காட்டுயிர் சரணாலயத்துக்கு தவறாமல் விஜயம் செய்ய வேண்டும். இதுவே இந்த ஸ்தலத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக கருதப்படுகிறது.

1956ம் ஆண்டு மே 10 ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்டுப்பகுதி தண்டேலி காட்டுயிர் சரணாலயமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு இது ‘தண்டேலி அன்ஷி புலிகள் பாதுகாப்பு மைய’மாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் உயரமான குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பிரதேசங்களை கண்டு ரசிக்கலாம்.

இந்த சரணாலயம் 814.16 ச.கி.மீ பரப்பளவினைக் கொண்டு சுமார் 100-970 மீட்டர் உயரங்களுடன் அமைந்துள்ளது.

இந்த சரணாலயம் கருஞ்சிறுத்தை போன்ற சில அரிய வகை விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியாகவும் திகழ்கிறது. குரைக்கும் மான், சாம்பார் மான், புள்ளி மான் இவற்றுடன் மஞ்சள் கால் புறா. அரிவாள் மூக்கன், கொண்டை வல்லூறு மற்றும் காட்டுக்கோழி போன்றவையும் காணப்படுகின்றன.

சுமார் 200 வகையான பறவைகள் இங்கு வசிக்கின்றன. மலபார் அர்வாள் மூக்கன், தீக்காக்கை, பிராம்மினி கழுகு போன்றவை இங்கு உள்ள சில விசேஷ பறவைகளாகும்.பயணிகள் இங்கு பரிசல் சவாரி மூலம் வனப்பகுதியை பார்வையிடலாம்.

இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக அக்டோபரிலிருந்து ஜூன் வரையிலான காலத்தை குறிப்பிடலாம். மேலும் திறந்த ஜீப்புகளில் வழிகாட்டியின் துணையுடன் பயணிகள் காட்டுச்சுற்றுலாவை மேற்கொள்ளலாம். இந்த சரணாலயத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்காவிற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat