சோழ சாம்ராஜ்யத்தின் முந்தைய தலைநகராக விளங்கிய ஊர் பழையாறை. இங்கு, சோழர் காலத்தைச் சேர்ந்த, தொன்மை வாய்ந்த கோவில்களை பயணிகள் பார்க்கலாம். அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது பழையாறை சோமேஸ்வர திருக்கோவில்.
இக்கோவிலை பழையாறை வடதளி என்றும் அழைப்பர். கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும், தாராசுரமில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள பழையாறை, ஒரு பிரபலமான ஆன்மீக சுற்றுலாத் தலம்.
இவ்வூர் தாராசுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வடதளி, தென்தளி, மேல்தளி, கீழ்தளி எனும் தொன்மை வாய்ந்த கோயில்களை கொண்ட பழையாறை நகரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஸ்தலம்.



Click it and Unblock the Notifications