தேவிகுளம் பகுதியின் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான சீதா தேவி ஏரிக்கு வெகு அருகிலேயே பள்ளிவாசல் அருவி அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய அலுத்துப் போன நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறான இந்த அருவியின் தனிமையையும், அமைதியையும் வெகுவாக விரும்புகிறார்கள்.
கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடமாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளிவாசல் கிராமத்தை சாலை மூலமாக சுலபமாக அடைய முடியும்.



Click it and Unblock the Notifications