Search
  • Follow NativePlanet
Share

தர் - வளமையான வரலாற்று சாராம்சம்!

14

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தர் என்ற இடம் பண்பாடு மற்றும் வராலாற்று சாராம்சம் கொண்ட தலமாகும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள மல்வாஸ் என்ற பகுதியில் உள்ள இந்த இடம், அங்குள்ள பண்பாட்டு வளமை கொண்ட பல இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. புவாரர்களால் ஆளப்பட்டது இந்த இடம். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் மராட்டியர்களால் ஆட்சி செய்யப்பட்ட போது, நாணயத்தின் காரணமாக இந்த இடத்திற்கு 'சல்யூட் ஸ்டேட்' என்ற அந்தஸ்து கிடைத்தது.

தர் - பொருந்த முடியா அழகு

மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ன நகரமான தர் செல்லும் வழியெங்கும் மதி மயங்கும் அழகுடன் ஒரு ஓவியத்தை போல் காட்சி அளிக்கும். கடல் மட்டத்திலிருந்து 559 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், ஏரிகளாலும் மலைகளாலும் வரலாற்றுப் பின்னணிகளை கொண்ட பழைய கட்டிடங்களாலும் சூழ்ந்துள்ளது. அதனால் தர் சுற்றுலா தனித்தன்மையுடன் விளங்குகிறது.

தர் - மத்தியப் பிரதேசத்தின் பண்பாட்டு நகரம்!

நுண் கலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசை மற்றும் நடனம் சேர்ந்தது தான் தர். பல ஆண்டு காலமாக இந்த ஊர் மக்கள் கலைகளுக்காக பல வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் இந்த பங்கு உலகம் முழுவதும் உணரச் செய்துள்ளது. பக்ஹ் குகைகளில் உள்ள ஓவியங்கள் குப்தா காலத்தில் வாழ்ந்த இந்த மக்களின் ஆற்றலை எடுத்துரைக்கும்.

தர் - புகழ் பெற்ற பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதி வாழ்ந்த பூமி!

புகழ் பெற்ற காதல் காவியமான பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் தலைமுறைகளை தாண்டி இன்னும் அனைவரையும் ஈர்க்கிறது. இந்த நகரத்தின் அனைத்து மூளை முடுக்குகளும் இவர்களின் காதல் கதையை பேசும்.

இலக்கியம், நடனம், இசை என அனைத்திலும் ஆர்வம் காட்டினார் பாஸ் பகதூர். அதனால் அவருக்கு கிடைத்த புகழ் தர் நகரத்தை இந்திய வரைபடத்தில் பலராலும் கவனிக்க வைத்தது.

தர் சுற்றுலா!

தர் நகரத்திலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்குள்ள பாக்ஹ் குகைகள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஒரு இடம். இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற ஈர்ப்பு பீதாம்பர் என்ற தொழிற்சாலை நகரமாகும்.

தர் வருவதற்கு சிறந்த காலம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களாகும். இன்டோரிலுள்ள விமான நிலையம் மற்றும் இரயில் நிலையத்திலிருந்து தரை வழி மார்க்கமாக தர் வந்தடையலாம்.

தர் சிறப்பு

தர் வானிலை

சிறந்த காலநிலை தர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தர்

  • சாலை வழியாக
    தர்ரிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு தரை வழியாக சுலபமாக செல்லலாம். மத்தியப் பிரதேச அரசாங்கம் MPSRTC பேருந்து சேவைகளை இயக்குகின்றன. இந்த பேருந்துகள் மூலம் தர்ரிலிருந்து மற்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் வசதி உள்ளது. இன்டோர், மொவ், ரத்லம், உஜ்ஜைன் மற்றும் போபாலிலிருந்து டாக்சிகள் மூலமாகவும் தர் வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தர் நகரில் இரயில் நிலையம் கிடையாது. தர்ரை வந்தடைய இந்தூர் இரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது டாக்சி மூலமாக வந்தடையலாம். இந்த இரயில் நிலையம் தர் தொழிற்சாலை நகரத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்று தான் இன்டோர் இரயில் நிலையம். அதனால் இங்கிருந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    இந்தூரிலுள்ள தேவி அஹில்யபாய் ஹோல்கர் தேசிய விமான நிலையம் தான் தர்ருக்கு அருகில் இருக்கும் விமான நிலையம். தர்ரிலிருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து டர் நகரத்துக்கு பேருந்து அல்லது டாக்சிகள் மூலமாக வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City