இந்திய கப்பற்கடையை சேர்ந்த ஐ. என். எஸ் குக்ரி எனும் போர்க்கப்பல் 1971 ம் ஆண்டில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின் போது டார்பீடோ குண்டுகளால் சேதப்படுத்தப்பட்டுவிட்டது.
தியூ கடற்கரைப்பகுதியிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் இந்த கப்பல் 18 ஆபிஸர்கள் மற்றும் 176 மாலுமிகளுடன் கடலில் மூழ்கியது. சரணடைய வாய்ப்பு தரப்பட்ட பொதிலும் அதற்கு இணங்காத கப்பல் கமாண்டிங் ஆபிஸர் கேப்டன் மஹேந்த்ரா நாத் முல்லா தானும் மாலுமிகளோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்தார்.
தான் அணிந்திருந்த உயிர்காப்பு உடையையும் தனது துணை அதிகாரிக்கு அளித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கு பிந்தைய மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.
ஐ. என். எஸ் குக்ரி’யின் மூழ்கலுக்குப்பின் 48 மணி நேரத்தில் கராச்சி துறைமுகம் இந்தியப்படையால் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தின் ஞாபகார்த்தமாக ஒரு நினைவுச்சின்னம் தியூ நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்ணாடி அமைப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் ஐ. என். எஸ் குக்ரி கப்பலின் நகல் வடிவத்தை இந்த நினைவுச்சின்னம் கொண்டுள்ளது.
கடலுக்கு அருகே ஒரு மலையின் உச்சியில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1999ம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி அப்போதைய கப்பற்படை தளபதியான அட்மிரல் மாதவேந்த்ர சிங் இந்த நினைவுச்சின்னத்தை திறந்து வைத்துள்ளார்.



Click it and Unblock the Notifications