Search
  • Follow NativePlanet
Share

துர்க் - யாத்ரீகர்களின் நகரம்!

8

சத்தீஸ்கரின் முக்கியமான நகரமான துர்க் புகழ்பெற்ற தொழில் மற்றும் விவசாய நகரமாகத் திகழ்கிறது. சியோநாத் நதிக்கரையில் உள்ள துர்க், சட்டீஸ்கரின் மூன்றாவது பெரிய நகரமாகும். மக்கள் தொகை அதிகமுள்ள இந்நகரம் தாது வளத்திலும் சிறந்து விளங்குகிறது,

சமவெளி மற்றும் தெற்கு பீடம் என இந்நகரை இரண்டாகப் பிரிக்கலாம். 345கிமீ நீளமுள்ள சியோநாத் நதி இவ்வழியாக ஓடுகிறது. கர்காரா என்ற நதியும் இங்குண்டு.

தக்‌ஷிணத்தின் பகுதியாக இந்நகரம் இருந்ததாக வரலாறு சொல்கிறது, அசோகருக்குப் பிறகு மராத்தியர்களும், அவர்களுக்குப் பின் ஆங்கிலேயர்களும் இங்கு ஆண்டிருக்கிறார்கள். 1906ல் மாவட்டமாக ஆக்கப்பட்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 2001ன் கணக்குப்படி 2,31,182 ஆகும்.

துர்க் கலாச்சாரம்!

வளமான பாரம்பரியமும் கலாச்சாரமும் உள்ள இந்நகரத்தில் 35 வகை பழங்குடியினர் வசிக்கிறார்கள். பலவகையான நடனங்களும், இசைவடிவங்களும் இங்கு உண்டு.

பத்வானி என்ற புகழ்பெற்ற நாடோடி ஆட்டம் இங்கு உள்ளது. பாண்டவர்களின் கதையச் சொல்லுமாறு அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் பாடலும் பாடப்படுகின்றன.

ராவுத்நச்சா என்ற மற்றொரு ஆடல்கலையும் இங்கு உள்ளது. மேய்ப்பர்களால் ஆடப்படும் கிருஷ்ணரை வழிபடும் இந்தக் கலை யாதவர்களின் கலை என வழங்கப்படுகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஶ்ரீ உவாசகரம் பர்ஷ்வ தீர்த், சண்டி மந்திர், கங்கா மையா கோவில், தியோபாலோடா, ஜைன கோவில்கள் என பலவகையான மத தளங்கள் இங்கு உள்ளன.  மேலும் ஹிந்தி பவன், படான், ப்ராசின் கிலா, பலோட், டண்டுலா, மைத்ரி பாக் ஆகிய இடங்களும் உண்டு.

துர்க் வானிலை

மித வெப்ப மண்டலமாக திகழும் இங்கு மிகவும் வெப்பமான வானிலையும், அதிக மழையும் பெய்கிறது. மழைக்காலங்களில் 1052மிமீ வரை மழை பெய்கிறது.

துர்க் அடையும் வழி

விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் துர்க் நகரை சுலபமாக அடையலாம்.

துர்க் சிறப்பு

துர்க் வானிலை

சிறந்த காலநிலை துர்க்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது துர்க்

  • சாலை வழியாக
    நாக்பூர், ராய்பூர் ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. உள்ளூர் பயணத்திற்கு ஆட்டோக்களை பயன்படுத்தலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மும்பை-ஹவுரா பிரதான வழியில் உள்ள இந்த ரயில் நிலையம் மும்பையில் இருந்து 1101கிமீ தொலைவிலும், ஹவுராவில் இருந்து 867கிமீ தொலைவிலும் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராய்ய்பூர் விமான நிலையம் இங்கிருந்து 54கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, நாக்பூர், கொல்கட்டா ஆகிய நகரங்களுக்கு விமானச் சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu