ஆன்மீக நகரமான துவாரகாவில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் புரிந்து கொள்ளமுடியாத புராணிக அம்சங்களைக்கொண்டவையாக வீற்றிருக்கின்றன. இவற்றில் சில அடுத்தடுத்து இந்த கோமதி காட் எனும் இடத்தில் அமைந்துள்ளன.
இந்த உயரமான இடத்திலிருந்து நகரின் அழகையும் நன்றாக பார்த்து ரசிக்கலாம். கோமதி ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்டும் மகிழலாம். இந்த கோமதி காட் ஆற்றுத்துறையில் சிவன் கோயில், கிருஷ்ணர் கோயில், ராமர் கோயில் மற்றும் கிருஷ்ணரின் நண்பரான சுதாமாவுக்கான கோயில் போன்றவற்றை தரிசிக்கலாம்.
காலங்காலமாக இந்த கோயில்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் முக்கியமாக விஜயம் செய்யும் கோயில்களாக பிரசித்தி பெற்று விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications