துவாரகா கோயில் நகரத்தில் துவாரகதீஷ் கோயில் வளாகத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ருக்மிணிதேவி கோயில் அமைந்துள்ளது. கஜதாரா எனப்படும் யானை உருவங்கள் மற்றும் நரதாரா எனப்படும் மனித உருவங்கள் போன்ற சிற்பப்பொறிப்புகள் இந்த ருக்மிணிதேவி கோயிலின் வெளிப்பகுதியின் காணப்படுகின்றன.
கிருஷ்ணரின் கோயிலிலிருந்து இந்த ருக்மிணிதேவி கோயில் விலகி காணப்படுவதன் பின்னணியில் ஒரு புராணிகக்கதையும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணரும் ருக்மணியும் ஒரு முறை துர்வாச முனிவரை தங்கள் இருப்பிடத்திற்கு வரவேற்க சென்றிருக்கின்றனர்.
அவர் தன்னை தேரில் இழுத்துச்சென்றால் வருவதாக கூறவே அவ்வண்ணமே கிருஷ்ணர் ருக்மணி தம்பதியர் அவரை அழைத்துவந்திருக்கின்றனர். வரும் வழியில் ருக்மணிக்கும் தாகம் எடுக்கவே கிருஷ்ணர் பூமியை தோண்டி கங்கை நீரை வரவழைத்து ருக்மணிக்கு கொடுத்துள்ளார்.
இந்த நீரில் சிறிது தனக்கு தராமல் முழுவதையும் ருக்மணியே குடித்துவிட்டதால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் கணவரிடமிருந்து பிரிந்திருக்கும்படி ருக்மணியை சபித்து விட்டதாக அந்த கதை கூறுகிறது. இப்படி கிருஷ்ணர் மற்றும் ருக்மணி கோயில்கள் விலகி தனித்தனியே இருப்பதற்கு இதுவே காரணம் என்பது ஐதீகம்.



Click it and Unblock the Notifications