குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் வளாகத்தின் உள்ளேயே இந்த ஷாஹித் கஞ்ச் குருத்வாராவும் அமைந்திருக்கிறது. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போரில் மரணமடைந்த 6000 சீக்கியர்களின் தகனத்தை நினைவுகூரும் விதமாக இந்த குருத்வாரா அமைக்கப்பட்டிருக்கிறது.
தகனக்கிரியைகளுக்காக பாபா பண்டா சிங் பயன்படுத்திய அதே இடத்தில் இந்த குருத்வாரா அமைப்பு எழுப்பப்பட்டிருக்கிறது. குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் பின்னணியில் வீற்றிருக்க ஒரு சிறிய வெண்ணிற கட்டமைப்பாக இது காட்சியளிக்கிறது.
உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தும் நோக்கத்துடன் சீக்கிய மக்கள் இந்த குருத்வாராவுக்கு விஜயம் செய்கின்றனர். முகலாய மன்னர் ஷாஜஹான் காலத்தில் இந்த குருத்வாரா கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications