சாதனா கசாய் மசூதி எனப்படும் இந்த மசூதி இந்திய தொல்லியல் துறையால் ஒரு வரலாற்றுக்கட்டிடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதனா கசாய்(க்வாஸி) என்று அறியப்பட்ட பகத் சாதனா எனும் ஆன்மீகப்பெரியவரின் நினைவாக இது அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு முஸ்லிம் கவிஞராகவும், ஞானியாகவும், மாயாசக்தி வாய்ந்தவராகவும் அவர் புகழ் பெற்றிருந்தார். அவரது ஆன்மீக பாடல்கள் சிக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிர்ஹிந்தி கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதி முகாலயர் கால கட்டிடக்கலை அம்சங்களையும் ‘T’ ஆர்ட் ஓவியங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications